To the Goddess of Knowledge
வாணியை வேண்டுதல் தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம் நீஅருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளருந் தமிழ்வாணீ, அடியனேற் கிவையனைத்தும் உதவு வாயே. To the Goddess of Knowledge Knowing things with clarity Narrating them with clarity For those who contemplate Show delightful dreams To erupt into joy To melt the inner self Causing tears copious All these are here Ordained by you O the light that intensifies! The Goddess of Knowledge!! Grant me all these Translation of Subramania Bharathi's verse By T Santhanam