A fine Harp thrown to dust
A fine Harp thrown to dust
After making a harp fine
Will you throw it to dust
To lose its worth?
Tell me O Sivasakthi!
A flame of Knowledge is mine
I am your creation
Won't you give me strength
To lead a life of worth
Tell me O Sivasakthi!
Will you make my life
A burden on the earth?
Like a ball that gains momentum
Give me a body that takes me
Wherever, my heart"s wish
A mind that is free of desires
A soul that shines each day
Like a flame new
A self that sings you in praise
Even if my flesh by fire is burnt
A mind that remains still
What impedes you to grant these?
Translated by T Santhanam
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவ துண்டோ?
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் நித்தம்
நவமெனச் சுடர் விடும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப்
பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ

நல்ல பாடல். நேர்த்தியான மொழி பெயர்ப்பு வாழ்த்துக்கள் 👍
ReplyDeleteநன்றி மதி
ReplyDeleteஅருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி
Delete